Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, June 19, 2022

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறையில் மாற்றம் - விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கல்வித்துறையில் மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை உள்ளிட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் உதவிபெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், புதுபித்தல், உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளும் முதன்மை கல்வி அலுவலரிடம் அனுமதி பெற்று நடைபெறுகிறது.

ஆனால் இதனை மீண்டும் பழைய "கஞ்சி புதிய பானையில்" என்ற திட்டத்தின்படி பழைய நிலைக்கு கொண்டு வர உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நர்சரி, தொடக்க, நடுநிலை பள்ளிகளை தொடக்க கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும் என்றும் உயர்நிலைப் பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. தனியார் உதவிபெறும் பள்ளிகள், அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல் ஆகியவை இணை இயக்குனர் வசம் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment