JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நண்பகல் 12 மணிக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in இந்த முகவரி பக்கத்திற்கு சென்று உங்களுக்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் மேற்படிப்பிற்காக கல்விக் கடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கோவை மாவட்ட தொழிற்கூட வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி கோவை மாவட்டத்தில் விண்ணப்பித்து இருந்த 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாய் செலவில் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தான் அதிகளவில் மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், மாணவ மாணவிகள் கல்வி கடனுக்காக தனியார் வங்கிகளை அணுகும் போது ஏதேனும் சிரமம் இருந்தால் கல்வி நிறுவனங்கள் மூலமாக கல்விக்கடனை பெற்றுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டுமே கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என அரசு முடிவு செய்திருந்தது. இனி வரும் 30 நாட்களில் கூடுதலாக 100 கோடி ரூபாய் வரைக்கும் கல்விக்கடன் வழங்க உள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment