JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிமுறைகளில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது .மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு அண்மையில் மாற்றியிருந்தது. இதில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்களை இதில் பார்க்கலாம்.
தீவிரவாதம் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு அண்மையில் திருத்தியுள்ளது. புதிய விதிமுறைகளின் படி தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்களின் பணிக்காலத்தின் போது காணாமல் போனால் அவர்கள் குடும்பத்திற்கு குடும்ப பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின் போது தொலைந்துவிட்டால் சம்பள நிலுவைத் தொகை, பணிக்கால பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பலன்கள் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட வேண்டும். காணாமல் போன ஊழியர்கள் திரும்பி வந்துவிட்டால் இடைப்பட்ட காலத்தில் அவரது குடும்பத்திற்கு செலுத்தப்பட்ட வந்த பென்சன் தொகை அவரது சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்படும். பழைய விதிமுறையில் மத்திய அரசு ஊழியர்கள் பணிக்காலத்தின் போது தொலைந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு பென்ஷன் வழங்கப்படும் மாட்டாது. அவர் தொலைந்து 7 ஆண்டுகள் கழித்த பிறகு அல்லது அவர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்ட பிறகே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment