Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 21, 2022

தொப்பையை குறைக்க சில எளிய பயிற்சிகள்


பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, இன்றைய காலத்தில், தற்போதைய வாழ்க்கை முறையின் காரணமாக அனைவரும் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், தொப்பையை குறைக்க ஆண்களுக்கான சில எளிய பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம்.

தொப்பையில் கொழுப்பு சேர முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை ஆகியவை. தொப்பை கொழுப்பு என்பது இதய நோய்கள் உட்பட பல கடுமையான, தீவிர நோய்களின் ஆதாரமாக உள்ளது என்பதை மறுக்க இயலாது. அதிக உடல் எடை என்பது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

மறுபுறம், ஆண்களுக்கு, தொப்பை கொழுப்பு தோற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, சிலருக்கு சட்டை பட்டன் போடுவதில் கூட சிக்கல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பலர் தங்கள் தொப்பையை குறைக்க ஜிம்மில் வியர்க்க வியர்க்க உடற் பயிற்சி செய்கிறார்கள். இது மிகவும் சிறந்த உடல் எடை குறைப்பு முயற்சி என்றாலும், ஜிம்மிற்குச் செல்ல எல்லோருக்கும் நேரம் கிடைப்பதில்லை.

அத்தகையவர்கள், வீட்டிலேயே சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உங்கள் தொப்பையைக் குறைக்கலாம். ஆண்கள் எப்படி தொப்பையை குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தொப்பையை குறைக்க, ஆண்கள் இந்த பயிற்சிகளை செய்ய வேண்டும்:

முழங்கால் பயிற்சி

ஆண்கள் தங்கள் தொப்பையை குறைக்க அதிக அளவில் முழங்கால் பயிற்சிகளை செய்வதை வழக்கமாகக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதிக முழங்கால் உடற்பயிற்சி, தொப்பை கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது. இந்த பயிற்சியை செய்ய, நீங்கள் ஒரு இடத்தில் நேராக நிற்க வேண்டும். பின்னர் இடது முழங்காலை தூக்கி உங்கள் மார்பில் மீது வைக்கவும். இதற்குப் பிறகு, அதை இறக்கி, வலது காலின் முழங்காலை மார்பில் வைக்கவும். இந்தப் பயிற்சியை தொடர்ந்து 10 நிமிடங்கள் செய்யவும்.

ஜம்பிங் ஜாக் பயிற்சி (Jumping Jack)

ஜம்பிங் ஜாக்ஸ் தொப்பை கொழுப்பை எரிக்க ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். இதற்கு நீங்கள் முதலில் எழுந்து நில்லுங்கள். இப்போது உங்கள் கால்களை அகலமாக விரித்து, மெதுவாக குதித்த படியே கைகளை மேலே தூக்கிக் கொண்டு தட்டவும். இந்த பயிற்சியை 10 நிமிடங்கள் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தொப்பை பெரிய அளவில் குறையும்.

சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சி

தொப்பைக் கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சிகளில், சைக்கிள் ஓட்டும் பயிற்சி மிகவும் பலன் கொடுப்பது என்றால் மிகையில்லை. இந்த பயிற்சியினால் அடிவயிற்று தசைகள் வலுப்படும். தொப்பை கரையும்.
உடல் கொழுப்பை எரிப்பதில் கார்டியோ, இதயத்தை வலுப்படுத்தும் உடற்பயிற்சிக்கு 50% பங்குண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment