JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மாணவிகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று எப்படி செக் பண்றது என்பதையும் பார்க்கலாம் வாங்க. தமிழகத்தில் சுமார் 2.70 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்போது 2ம் ஆண்டில் திமுக பயணிக்கிறது. அது மட்டும் இன்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும், இந்த உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment