JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை ஒரு வருடத்திற்குள் தொகுப்பூதியத்தில் நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகள் முற்றிலும் தற்காலிகமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படூம் இந்த பணியிடங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள் அந்த பணியிடங்களில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனத்தின் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment