JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு சேர்வதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்கும். ஜூலை 7 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்கள் வழியே, விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். கல்லுாரிகளின் விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணமாக, தேர்வு செய்யும் ஒவ்வொரு கல்லுாரிக்கும், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment