Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 14, 2022

இனி ஆசிரியர்கள் விடுமுறை வேண்டும் என்றால் நேரில் செல்ல வேண்டாம்.! ஆன்லைன் மூலமே அப்ளை செய்யலாம்.! தமிழக அரசு அறிவிப்பு.!

ஆசிரியர்கள் இனி செயலி வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும்.  நேரில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்து அனுமதி பெறும் நடைமுறை தமிழக அரசு ரத்து செய்துள்ளது .

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு விடுப்பு வேண்டுமென்றால் தலைமை ஆசிரியரிடம் விடுப்பு விண்ணப்பம் எழுதி ஒப்படைக்கும் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் பணி சார்ந்த சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான செயலி பயன்பாட்டை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இனி மருத்துவ விடுப்பு, தற்செயலாக எடுக்க வேண்டி இருக்கும் விடுப்பு உள்ளிட்டப் பல்வேறு பணிகளுக்கு எழுத்துப் பூர்வமாக மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டு வந்த நடைமுறையை தமிழக அரசு கடைபிடித்து வந்தது.

இந்நிலையில் இதனால் ஏற்படும் கால நேரத்தை சரி செய்யும் பொருட்டு TN SED schools என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 2022-23 கல்வி ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பணி சார்ந்த தேவைகளை செயலியைப் பயன்படுத்தி பெற்றுக்கொள்ள அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment