Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 9, 2022

மருத்துவ வரலாற்றில் ஒரு சாதனை

மருத்துவ வரலாற்றில் ஒரு சாதனை: 100% குணமடையும் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்து சோதனையில் புற்றுநோயை குணப்படுத்தி உள்ளது. சோதனையில் கலந்து கொண்ட புற்றுநோயாளிகளும் இந்த மருந்து எடுத்துக்கொண்ட பின் குணமடைந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டர் நடத்திய சிறிய மருத்துவ பரிசோதனையில், 18 புற்றுநோயாளிகள் சுமார் ஆறு மாதங்களுக்கு டோஸ்டார்லிமாப்(Dostarlimab) என்ற மருந்தை உட்கொண்டனர், இறுதியில், அவர்கள் மேற்கொண்ட சோதனையில் புற்றுநோய் செல்கள் மறைவதை கண்டறிந்தனர்.

டோஸ்டார்லிமாப் என்பது பல்வேறு மூலக்கூறுகளைக் கொண்ட ஒரு மருந்து. இது மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

புற்றுநோயாளிகள் கீமோதெரபி, கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொண்டால், குடல் மற்றும் பல்வேறு உடலுறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே 18 நோயாளிகள் அடுத்த கட்டமாக டோஸ்டார்லிமாப் மருந்து சோதனைக்குச் சென்றனர். அவர்களுக்கு ஆச்சரியமாக, சிகிச்சை இல்லாமல் டோஸ்டார்லிமாப் மருந்தால் குணமாகியுள்ளது.

எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் அனைத்து சோதனையிலும் புற்றுநோய் செல்கள் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டோஸ்டார்லிமாப் மருந்தால் இயற்கையாக புற்றுநோய் செல்கள் அழிகின்றன. டோஸ்டார்லிமாப் மருந்து பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போது 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள்.

டோஸ்டார்லிமாப் மருந்தை மதிப்பாய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள், சிகிச்சையானது நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது, ஆனால் பெரிய அளவிலான சோதனை தேவையென்றும், இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் செய்யப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment