Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 21, 2022

உடல் எடையை குறைக்க கற்றாழை எவ்வாறு உதவுகிறது...?

கற்றாழையை எளிதாக நம் வீட்டிலேயே தொட்டியில் வளர்க்கலாம். இதற்கு அதிக தண்ணீர் தேவை இல்லை.

கற்றாழை இலையிலிருந்து கிடைக்கும் ஜெல்லே அதிகமாக மருந்தாக பயன்படுகிறது. இதனை பயன்படுத்தி பல அழகு சாதன நிறுவனங்கள் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கின்றன.

கற்றாழை ஜெல் தோல் பராமரிப்பு, முடி வளர்ச்சி, உடல் எடை குறைதல் என பலவற்றுக்கு பயன்படுகிறது. உடல் எடை குறைய கற்றாழை எவ்வாறு உதவுகிறது என்பதை காண்போம்.

கற்றாழை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் என்பது உடல் கலோரிகளையும் கொழுப்பையும் வழக்கமாக எரிப்பதை காட்டிலும் மிக வேகமாக எரிக்கிறது என்பதாகும். எனவே கற்றாழை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் நாள் முழுவதும் எரியும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே இதன் காரணமாக உடல் எடை குறையும்.

கற்றாழை ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் இது உடலை தூய்மைப்படுத்துகிறது. நம் உடல் சுத்தமாக இருக்கும்போது, உடல் எடை விரைவில் குறையும்.

கற்றாழை நம் உண்ணும் உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுகிறது . இதனால் எடை குறைகிறது.

கற்றாழை பல ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. அதனால் பசைத்தன்மை குறைகிறது . குறைவாக சாப்பிடுவதால் எடையும் குறைகிறது. கற்றாழையை சரியான அளவில் தொடர்ந்து உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்க முடியும்.

கற்றாழை உடலில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கும். அதுவும் உடல் எடை குறைய ஒரு காரணமாய் விளங்குகிறது.

No comments:

Post a Comment