10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் இந்திய புள்ளியியல் வேளாண்மை துறையில் வேலை 5,012 காலிப்பணியிடங்கள் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, July 14, 2022

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் இந்திய புள்ளியியல் வேளாண்மை துறையில் வேலை 5,012 காலிப்பணியிடங்கள்

இந்திய புள்ளியியல் வேளாண்மை மற்றும் மேப்பிங் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் காலியாக உள்ள Assistant Managers, Field Officers பணிகளுக்கென மொத்தம் 5012 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ISAM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Managers, Field Officers மற்றும் பல்வேறு பணிகளுக்கென மொத்தம் 5012 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Managers - 1116 பணியிடங்கள்
Lower Division Clerks - 1184 பணியிடங்கள்
Multi-Tasking Staff - 1158 பணியிடங்கள்
Junior Survey Officer - 1012 பணியிடங்கள்
Field Officers - 542 பணியிடங்கள்

இந்திய புள்ளியியல் வேளாண்மை கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Managers மற்றும் Lower Division Clerks பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Multi-Tasking Staff பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Survey Officer விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Field Officers விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISAM வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய புள்ளியியல் வேளாண்மை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Managers, Lower Division Clerks - ரூ. 45,000/-
Multi-Tasking Staff - ரூ. 40,000/-
Junior Survey Officer - ரூ. 35,000/-
Field Officers - ரூ. 28,000/-

ISAM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் (Merit Basis) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய புள்ளியியல் வேளாண்மை விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.480/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad