Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 14, 2022

நீட் தேர்வு விதிமுறைகள் அறிவிப்பு..!!


எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

2022-2023-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. 

நாடு முழுவதும் 543 நகரங்களில் நடைபெறவுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர்.

தற்போது கொரோனா பரவல் மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் நீட் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 

தேர்வு எழுத வரும் தேர்வர்கள் ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு என்95 முகக்கவசம் வழங்கப்படும். 

மேலும், வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம்.

தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டையும் தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தேர்வர்களின் விடைத்தாள் திருத்தப்படாது. 

17-ம் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் www.nta.ac.in-ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment