குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.? லிஸ்ட் ரெடி. வெளியான தகவல்..!!!!! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Thursday, July 7, 2022

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.? லிஸ்ட் ரெடி. வெளியான தகவல்..!!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்க 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக அரசு ரேஷன் அட்டைதரர்களுக்கு பொங்கல் பரிசு, கொரோனா நிவாரணம், உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வழங்குகிறது. அதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள் உள்ளிட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பயனடைந்து வருகின்றனர். எனவே குடும்ப தலைவிக்கு ரூ.1000 தொகையை அனைத்து ரேஷன் அட்டைதரர்களுக்கும் வழங்க முடியாது.

ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திலும் முதியோர்கள் உதவி தொகை, விவசாய நிதி உதவி என மத்திய, மாநில அரசின் திட்டங்களை பெறும் பயனாளிகள், ஏழ்மையில் உள்ளவர்களுடைய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி இலவச சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆய்வுக்கு பின் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வில் முதல் கட்டமாக இலவச கேஸ் இணைப்பு பெற்று உள்ளவர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த பயனாளிகளும் அடையாளம் காணப்பட்ட பின்பு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad