ஆசிரியர்களுக்கு 17ம் தேதி முதல் மாறுதல் கவுன்சலிங் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, July 2, 2022

ஆசிரியர்களுக்கு 17ம் தேதி முதல் மாறுதல் கவுன்சலிங்

அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான கவுன்சலிங் 11ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையில் அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அதன் ஊட்டுப் பகுதியிலிருந்து பதவி உயர்வு நியமனம் செய்ய வசதியாக பதவி உயர்வு கவுன்சலிங் இணைய தளம் மூலம் 11ம் தேதியில் இருந்து நடக்கிறது.

இதன்படி, 11ம் தேதி அரசு நகராட்சி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியிடங்களுக்கு பதவி உயர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர் பெயர் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்படும். 

12, 13ம் தேதி மேற்கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கவுன்சலிங் நடக்கும். 

14, 15ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கவுன்சலிங் நடக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad