Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 2, 2022

நடந்தாலே மூச்சு வாங்குதா., அதை அலட்சியமாக விட வேண்டாம்.!

சாதாரணமாக ஒருவர் வேகமாக ஓடினாலோ அல்லது உடலை வருத்தி வேலை செய்தாலோ, உடற்பயிற்சி மேற்கொண்டாலோ மூச்சு வாங்குவது வழக்கம்.

ஆனால் இயல்பை தாண்டி ஒருவருக்கு சாதாரணமாக வேலை செய்தாலே மூச்சு வாங்குகிறது என்றால் அதை கண்டுகொள்ளாமல் விடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கை விளைவித்து விடும்.

ரத்தத்தில் இரும்பு சத்து குறைபாடு இருந்தால் மட்டுமே இதுபோன்று மூச்சு வாங்குதல் பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். படிக்கட்டில் ஏறும்போதும், நடக்கும்போதும் மூச்சு வாங்குகிறது என்றால் அது இரும்புச் சத்துக் குறைபாடின் அறிகுறி என புரிந்து கொள்ளலாம்.

இரும்பு சத்து குறைபாடு ஆண், பெண் என இருபாலரை பாதித்தாலும் பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாத விடாய் காலத்தில் வெளியேறும் உதிரப்போக்கு, மகப்பேறுக்கு பின் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள், சத்தான உணவு உட்கொள்வதன் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள்தான் இரும்பு சத்து குறைபாட்டால் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் சோர்வு, வெளிர் சருமம், மூச்சு திணறல், இதயத்துடிப்பு அதிகரித்தல், கால் மரத்துபோதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதன் காரணத்தால் இரும்பு சத்து குறைபாடு உள்ள ஒரு நபர் இயல்பான, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான ஒரு வாழ்கையை வாழ முடியாத நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் கொஞ்சம், கொஞ்சமாக சிதைவுற்று உயிரிக்கே உலை வைத்து விடும். அதனால் ரத்தத்தில் இரும்பு சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

முதலில் இரும்பு சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகி போதுமான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதே நேரம் இரும்பு சத்தை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பேரீச்சம் பழம், மாதுளை, நெல்லி, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், கீரை வகைகள் குறிப்பாக முருங்கை கீரை, உலர்கனிகள், பீட்ரூட், தேன், தேன் நெல்லி, அத்திக்காய், அத்திப்பழம் போன்றவைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment