Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 31, 2022

சைனஸ் தலைவலி ஏன் ஏற்படுகிறது..? வராமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலைவலி என்பது பொதுவான பிரச்சனை. தலைவலி பெரும்பாலும் குறைவான காரணங்களால் தான் ஏற்படுகிறது.

இருப்பினும், தலைவலி சில கடுமையான நோய்களின் அறிகுறியாகும். இந்த சந்தர்ப்பங்களில், தலைவலிக்கு சரியான சிகிச்சை தேவைப்படுகிறது. சைனஸ் தலைவலி என்பது சைனஸில் ஏற்படும் தொற்று காரணமாக ஏற்படும் வலி. சைனசிடிஸ் ஏற்படும் போது, சைனஸ் சவ்வுகளின் வீக்கம் காரணமாக இந்த ஓட்டம் தடைபடுகிறது. இது சைனஸ் தொற்று மற்றும் தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல் போன்ற அறிகுறிகளை உண்டாக்கும்.

சைனஸ் மற்றும் சைனஸ் தலைவலி

சைனஸ் என்பது முகம் மற்றும் மண்டை ஓட்டின் எலும்புகளில் உள்ள காற்று துவாரங்களைக் குறிக்கும். இந்த சைனஸ்கள் இரண்டு கண்களுக்குக் கீழேயும், நெற்றியில் கண்களுக்கு மேலேயும், இரண்டு கண்களின் நடுவிலும், மூக்கின் பின்பகுதியிலும் அமைந்துள்ளன. சைனஸ்கள் மண்டை ஓட்டின் எடையைக் குறைக்கின்றன. இந்த சைனஸ் என்று கூறப்படும் எலும்பின் பகுதிகள் வீங்குவது (inflammation) சைனசிடிஸ் என்று அழைகப்படுகிறது.

சைனஸ் தலைவலி மற்றும் மைக்ரேன்

அப்போலோ ஸ்பெக்டிரா மருத்துவமனையின் ENT அறுவை சிகிச்சை நிருபர் மற்றும் ஆலோசகரான மருத்துவர் மனஸ்வினி ராமச்சந்திரா கூறுகையில், சைனஸ் வீக்கத்தால் முகத்தில் அழுத்தம் ஏற்படும். குனியும் போது இருமும் போது வலி அதிகரிக்கும்.

பெரும்பாலான சைனஸ் தலைவலி அறிகுறிகள் அனைத்துமே மைக்ரேன் உடன் தொடர்புடையது. எனவே இது சைனஸ் தலைவலியா அல்லது ஒற்றை தலைவலியா என்பது பெரும்பாலானவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. மைக்ரேனாக இருக்கும்பொழுது அதை சைனஸ் தலைவலி என்று நினைத்து அதற்கான வீட்டு சிகிச்சைகளை பலர் மேற்கொள்வார்கள்.

மைக்ரேன் தலைவலியை பொறுத்தவரை ஒரு சில மணி நேரங்கள் தான் நீடிக்கும். மிகவும் மைல்டாகத் தொடங்கி மைக்ரேன் தலைவலி ஒரு கட்டத்தில் தீவிரமடைந்து பின்பு தானாகவே குறைந்துவிடும். ஆனால் சைனஸ் தலைவலி பல நாட்களுக்கு நீடிக்கும். முக வீக்கம், நெற்றி மூக்கு, தாடை, கன்னம், பற்கள் என்று அனைத்து இடங்களிலும் பாரமாக உணர்வீர்கள்.

சைனஸ் தலைவலிக்கான பொதுவான காரணங்கள்:


ஜலதோஷம்

குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை

மூக்கில் சதை அல்லது அசாதாரண வளர்ச்சி

மூக்கின் குருத்தெலும்பு கோணலாக இருப்பது

சைனிஸ் தலைவலிக்கான சிகிச்சைகள்:

நீராவி பிடிப்பது சைனஸ் வீக்கத்தை குறைத்து, சுவாசிப்பதை எளிதாக்கும். தண்ணீரில் யூக்கலிப்டஸ் தைலம் மற்றும் மஞ்சள் கலந்து நீராவி பிடிப்பது உடனடியாக நிவாரணம் அளிக்கும்.

மூலிகை தேநீர், கஞ்சி, சூப் உள்ளிட்ட நிறைய சூடான திரவ உணவுகள் சாப்பிடுவது சளியை வெளியேற்ற உதவும்.

'நெட்டி பாட்' என்பது நாசிகளை சுத்தம் செய்து, சைனசை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சுத்தமான தண்ணீரில் உப்பைக் கலந்து ஒரு நாசியின் வழியாக உள்ளே செலுத்தி மற்றொரு நாசியின் வழியாக வெளியேற்றலாம்.

OTC வலி ​​நிவாரணி மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும். Nasal congestion குறைக்க இன்ஹேலரைப் பயன்படுத்தலாம்.

ஐபூ-புரூஃபன் மற்றும் அசெட்டமினோஃபென் ஆகிய வலிநிவாரணிகள் தலைவலியைக் கட்டுப்படுத்த உதவும். இருப்பினும், அத்தகைய மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

தீவிரமான சைனஸ் தலைவலிக்கு, மருத்துவர்கள் ஆண்டிஹிஸ்டமின்கள், மியூகோலிடிக்ஸ் மற்றும் டிகஞ்சஸ்டெண்ட்ஸ் ஆகியவற்றை பரிந்துரைக்கலாம்.

சைனஸ் பிரச்சனைகளுக்கு பின்னால் வேறு ஏதேனும் உடல் குறைபாடுகள் அல்லது காரணங்கள் இருந்தால், அவற்றை அறுவை சிகிச்சை அல்லது முறையான மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றலாம்.

சைனஸ் தலைவலியுடன் வேறு அறிகுறிகள் மைல்டாக இருந்தால், வீட்டு வைத்தியங்களும் பலன் தரும். இருப்பினும், ஏழு நாட்களுக்கு மேல் உங்களுக்கு காய்ச்சல், கடுமையான வலி மற்றும் தலைவலியுடன் தொற்று ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை.

No comments:

Post a Comment