Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 12, 2022

மிளகை உண்டால் மிரள வேண்டாம்

நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது. மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்

மிளகின் காரமான நெடிக்குக் காரணம் பைப்பரின் ஆகும்.

வயிற்றின் ஆரோக்கியத்திற்கு

மிளகானது வயிற்றுக்குள் ஹைட்ரோகுளோரிக் அமிலச்சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலமானது செரிமானத்திற்கு மிகவும் அவசியமானது.

மேலும் இது வயிற்றில் வாயுக்கள் உருவாக்கத்தை தடுப்பதோடு சிறுநீர் மற்றும் வியர்வைச் சுரப்பினை ஊக்குவித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.



மேலும் மிளகானது வாயு நீக்கியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

செரிமானம் நன்கு நடைபெற

மிளகில் உள்ள பைப்பரின் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. இதனை உண்ணும் போது நாக்கில் உள்ள சுவை மொட்டுகளை ஊக்குவிக்கப்பட்டு ஹைட்ரோகுளோரிக் அமிலச்சுரப்பைத் தூண்டப்படுகிறது.

இந்த அமிலம் வயிற்றில் உள்ள மற்ற உணவுகளுடன் புரதங்களையும் நன்கு செரிமானம் செய்கிறது.

மிளகில் உள்ள கேப்சைசின் குடலினைப் பாதுகாக்கிறது. கார உணவினால் குடல் பாதிக்கப்பட்டிருந்தால் மிளகினை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நிவாரணம் கிடைக்கும்.

மிளகானது உணவிற்கு சுவையை அளிப்பதோடு ஏனைய உணவுப்பொருட்களிலிருந்தும் ஊட்டச்சத்தினை குடல் உறிஞ்சவும் உதவுகிறது.

ஆரோக்கிய எடை இழப்பிற்கு

மிளகானது உடலில் உள்ள கொழுப்பு செல்களை எளிதாக உடைத்து நொதி வினைகள் மற்றும் பிற செயல்களுக்கு பயன்படுத்தச் செய்கிறது. இதனால் உடலில் கொழுப்பு சேகரமாகி உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

மேலும் இது உடலில் உள்ள நஞ்சுப் பொருட்களை வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது. இதனாலும் ஆரோக்கியமான உடல் எடை இழப்பு உண்டாகிறது.

சளி தொல்லை மறைய

மிளகில் உள்ள எதிர்ப்பு சக்தியானது சுவாசப் பாதையில் உண்டாகும் சளி மற்றும் கபத்தினை உடைத்து எளிதாக வெளியேற்றுகிறது. ஆதலால்தான் ஆயுர்வேதத்தின் சளிக்கான மருந்துகளில் மிளகானது சேர்க்கப்படுகிறது. மேலும் இது சைனஸ் மற்றும் மூக்கடைப்பிற்கு சிறந்த நிவாரணமாகும்.

பாக்டீரியா எதிர்ப்பாற்றல்

மிளகின் பாக்டீரியா எதிர்ப்பாற்றல் நோய் தொற்று மற்றும் பூச்சி கடித்தலுக்கு எதிராக செயல்படுகிறது.

மிளகில் உள்ள பைப்பரின் நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. ஈறு அழற்சி, வாய் துர்நாற்றம், பற்சிதைவு உண்டாக்கும் பாக்டீரியாக்களின் செயல்பாட்டினை மிளகானது அழித்துவிடுகிறது.

நினைவு திறனை மேம்படுத்த

மிளகின் முக்கியப் பொருளான பைப்பரின் நினைவகக் குறைபாடு மற்றும் அறிவாற்றல் செயலிழப்பு ஆகியவற்றைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பைப்பரின் மூளையில் உள்ள வேதியியல் பாதைகளைத் தூண்டுகின்றன. அல்சைமர் எனப்படும் வயதானவர்களில் காணப்படும் நினைவகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது தீர்வளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோயைத் தடுக்க

மிளகில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் புற்றுச்செல்கள் உருவாக்கத்தைத் தடுக்கவும், ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட புற்றுச்செல்களைப் பாதுகாக்கவும் மிளகில் உள்ள பைப்பரின் உதவுகிறது.

இது குடல், இரைப்பை, மார்பகம் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாக்கத்தைத் தடைசெய்கிறது.

No comments:

Post a Comment