Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 12, 2022

அறிவுத்திறனை மேம்படுத்தும் வால்நட்டை - எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

வால்நட்டின் மருத்துவ பண்புகள்

வால்நட் உடலில் உள்ள அதிக படியான கொழுப்பை கரைத்து உடலில் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

வால்நட்டை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிக ஆரோக்கியம் அளிக்கும் மற்றும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்.

குழந்தைகளுக்கு தினமும் 5 என்ற வீதம் கொடுத்து வந்தால் மூளையின் ஆற்றலை நன்றாக தூண்டுகிறது.

வால்நட்டில் உள்ள வைட்டமின் மற்றும் புரதச்சத்துக்கள் இரத்தத்தில் கலந்து மூளையே நன்கு செயல் பட வைக்கிறது.

வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதியைப் போக்குகிறது.

பெண்கள் தினமும் ஊற வைத்த வால்நட்டை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோயை தவிர்க்கலாம் மற்றும் கணைய புற்று நோயின் அபாயத்தையும் தடுக்கலாம்.

IT துறையில் வேலை செய்பவர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்வதால் அதிக நபர்கள் தூக்கமின்மையால் அதிகம் பாதிக்க படுகிறார்கள்.



மூளையின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு

இது மூளைக்கான சிறப்பு உணவாகும். ஒமேகா-3 குறைபாடு அதிக மன அழுத்தத்தையும், அறிவாற்றல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.

இக்கொட்டையில் உள்ள ஒமேகா-3 அமிலமானது மன அழுத்தத்தைக் குறைத்து மூளையின் நினைவாற்றலை கூட்டுவதோடு சிந்தனை செயலாக்கத்தையும் அதிகரிக்கிறது.

இதனால் இதனை சீராக உணவில் சேர்த்துக் கொண்டு மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

ஆரோக்கியமான இதயத்திற்கு


இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம், லினோலிக் அமிலம், ஆல்பா லினோலெனிக் அமிலம், அராச்சிடோனிக் அமிலம் ஆகியவை இதயநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

இதனை சீராக உணவில் உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நரம்புகளில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது.

மேலும் இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எண்டோடெலியல் செல் செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆரோக்கிய இதயத்திற்கு இதனை அளவோடு உண்ணலாம்.

எலும்புகளின் பலத்திற்கு

வால்நட்டில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிபடுத்துகிறது. இது உடலானது கால்சியம் உறிதலை ஊக்குவிக்கிறது.

உடலின் எடையை பராமரிக்க

இதனை உட்கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்து மிகுந்த இதனை உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுஉப்புகள், கொழுப்புகள் கிடைப்பதால் இடைவேளை உணவாகவும் உட்கொள்ளலாம்.

இதனை அதிகமாக உட்கொண்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் இதனை அளவோடு உட்கொள்வது அவசியம்.

ஆன்டி ஆக்ஸிஜென்ட் மையம்

ஆன்டி ஆக்ஸிஜென்ட் அதிகமுள்ள உணவுப்பொருட்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மிகவும் அரிதான ஆன்டி ஆக்ஸிஜென்டுகளான குயினோன் ஜுக்லோன், டானின் டெல்லிமாக்ராண்டின் மற்றும் ஃபிளாவனோல் மோரின் ஆகியவை இக்கொட்டையில் உள்ளன.

இந்த ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் வேதிப்பொருட்களால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்கிறது.

உடல் வளர்சிதை மாற்றம் மேம்பாடடைய

இதில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் மற்றும் மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து போன்றவை உடலின் சீரான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

செரிமானம், நியூகிளிக் அமில தொகுப்பு உள்ளிட்ட சீரான உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு வால்நட்டினை உண்ணலாம்.

உணவுப் பாதையின் ஆரோக்கியத்திற்கு

இது உட்புற செரிமான மண்டலத்தின் நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவுகிறது.

இதனை சீராக உட்கொள்ளும்போது லாக்டோபாசில்லஸ், ரூமினோகாக்கஸ் மற்றும் ரோஸ்புரியா போன்ற குடலின் ஆரோக்கியத்திற்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து உணவுப்பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

சரும பாதுகாப்பிற்கு

இதில் உள்ள விட்டமின் இ ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் இதனை உண்ணும் போது சருமச் சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமம் உண்டாவது தடுக்கப்படுகிறது.

கண்களுக்கு அடியில் கருவளையத்தை நீக்க வால்நட் உள்ள பொருட்களைப் பயன்படுத்தவும். பளபளக்கும் இளமையான சருமத்தைப் பெற இக்கொட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான கூந்தலைப் பெற

இக்கொட்டையில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் மயிற்கால்களை வலிமையடையச் செய்து பொடுகு உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளை போக்குகிறது. மேலும் அடர்த்தியான, நீளமான, வலிமையான கூந்தலையும் வழங்குகிறது.

முறையான உறக்கத்திற்கு

இக்கொட்டையினை உண்ணும்போது மெலாட்டானின் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. மெலாட்டனின் தூக்கத்தைத் தூண்டுவதோடு அதனை முறைப்படுத்துகிறது.

முறையான ஆழ்ந்த தூக்கத்திற்கு இக்கொட்டையினை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment