மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை சலுகை பெற்று முறைகேடு - அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, July 9, 2022

மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை சலுகை பெற்று முறைகேடு - அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை உள்ளவர்களே நிரப்பி விடுகிறார்கள் அதன் பின்னணி விவரம் :

முன்னுரிமை உள்ளவர்களில் ஒரு சிலர்கள் அரசு வழங்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்திக் கொண்டு பல லட்சங்கள் பெற்றுக் கொண்டு தவறாக பல ஆண்டுகள் தமிழகம் முழுவதும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாறிக்கொண்டே இருக்கிறார்கள் கல்வித் துறை உயர் அதிகாரிகளின் கண்களுக்கு இது தெரியவில்லையா?

ஏன் இந்த ஆசிரியர் சொந்த மாவட்டத்திற்கு வந்த பிறகு அடுத்த ஆண்டு நடைபெறும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் வேறொரு மாவட்டத்திற்கு செல்கிறார்? .

இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டமாக பல லட்சங்களை கையூட்டாக பெற்றுக் கொண்டுமாறிக் கொண்டே இருக்கும் பண ஆசை பிடித்து அலையும் ஆசிரியர் சமுதாயத்தின் விசக் கிருமிகளை விசாரணை செய்து ஒரு சிலரா? அல்லது ஒரு பெரிய நெட்வொர்க்கா? என்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் காத்திருந்து கடைசி வரை இடம் ஏதும் கிடைக்காத பாதிக்கப்பட்ட பண வசதி இல்லாத ஆசிரியர் சார்பாக பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Top Ad