Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, July 10, 2022

இனி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது கிடையாது?. ஐகோர்ட் திடீர் அறிவிப்பு..!!!!

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கிட்டத்தட்ட 10,331 காலிப் பணியிடங்கள் இருக்கிறது. பெரும்பாலும் இப்பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது.

இதனிடையில் முன்பே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இதுவரை பணியிடம் நியமிக்கப்படாமல் இருக்கிறது. மேலும் இந்த் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல்தாள் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வின் அடிப்படையில்தான் பணியிடம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதுமான ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அத்துடன் ஆசிரியர் தகுதி வாரியத்தின் வாயிலாக பணியிடங்கள் நிரப்ப கால தாமதம் ஆகும் என்பதால், தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டு உள்ளது.

அதற்குரிய விண்ணப்பங்களும் பெறப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அரசு உதவி பெரும் பள்ளியில் வேலைபார்த்த ஆசிரியர் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு அரசு பள்ளியில் வேலைக்கு சேர்ந்தால் முந்தைய பணிப்பயனை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாது என ஐகோர்ட் கிளை அறிவித்து உள்ளது. அதாவது ஓய்வூதிய விதிப்படி ஆசிரியர் பதவியிலிருந்து தானே விலகினால் பணிக் காலத்தை ஓய்வூதியத்துக்காக கணக்கிட முடியாது என்று திடீர் அறிவிப்பு ஒன்றை ஐகோர்ட்கிளை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment