Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 3, 2022

செப்டம்பர் 1 - 11 வரை முதுகலை க்யூட் தேர்வுகள்

முதுகலை பட்டப்படிப்புகளுக்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வுகள், செப்., 1 - 11 வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. 'மத்திய பல்கலைகள் மட்டுமின்றி விருப்பமுள்ள மாநிலங்கள் மற்றும் தனியார் பல்கலைகளும், இந்த க்யூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நடப்பாண்டு இளங்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்வு ஜூலை 15 - 20 வரை நடந்து முடிந்தது. மீதமுள்ள மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு ஆக., 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான, தேர்வு அனுமதி சீட்டுகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் தேர்வுகள் செப்., 1 - 11 வரை நடக்க இருப்பதாக, பல்கலை மானிய குழுவின் தலைவர் மமிடலா ஜெகதீஷ் குமார் நேற்று அறிவித்தார்.உள்நாட்டில் உள்ள 500 நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் உள்ள 13 நகரங்களில் இருந்தும், மொத்தம் 3.57 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

No comments:

Post a Comment