JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியாகின்றன.அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த மே மாதம் நடந்த பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் பங்கேற்ற மாணவர்களில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தோருக்கு, இன்று முற்பகல் 11:30 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்களின் பட்டியலை பார்த்து கொள்ளலாம்.
பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கு, விடைத்தாள்களில் எந்த மாற்றமும் இல்லை என கருத வேண்டும். மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் மட்டும், தங்களின் பதிவெண், பிறந்த தேதி ஆகிய விபரங்களை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு, அசல் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment