Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 12, 2022

3,552 காவலர் பணியிடங்கள்: மகப்பேறு கால பெண்கள் விண்ணப்பிக்கலாமா?

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மகப்பேறு காலத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாமா?
உடற்தகுதி தேர்வில் சலுகைகள் உண்டா? தொடர்பான விவரங்களை இங்கே காண்போம்.

முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டிகள், சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு முறை நடைபெறுகிறது.

இதில், உடற்திறன் போட்டிகள் முக்கியத்துவும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில், பெண் விண்ணப்பதாரர்களுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் / கிரிக்கெட் பந்து எறிதல், ஓட்டப் பந்தயம் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.

மகப்பேறு காலங்களில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு கீழ்காணும் நடைமுறைகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையயம் பின்பற்றுகிறது.

(i) மகப்பேறு காலத்திலுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது அவ்விண்ணப்பத்தில் மகப்பேறு நிலையைக் குறிப்பிட வேண்டும்.

(i) உடற்கூறு அளத்தல் தேர்வின் போது மகப்பேறு காலத்திலுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் தேர்வுமைய துணைக்குழு தலைவரிடம் (chairperson of the sub-committee of the centre) தனது மகப்பேறு நிலையினை தெரிவித்திட வேண்டும்.

(iII) மகப்பேறு காலத்திலுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் உடற்கூறு அளத்தல் மற்றும் பிற தேர்வுகளில் கலந்துகொள்ள இயலாதென, அரசு மருத்துவரால் சான்றிதழ் அளிக்கும் பட்சத்தில், இத்தேர்வு செயல்பாடு தொடர்பாக ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் (பிப்ரவரி முதல் வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில்)

(iv) மகப்பேறு காரணமாக முதற்கட்ட உடற்கூறு அளத்தல் மற்றும் பிற தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாத பெண் விண்ணப்பதாரர்கள், இத்தேர்வில் தங்களது முதுநிலையை (Seniority) இழக்கமாட்டார்கள். இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் தேர்வில் மகப்பேறு விண்ணப்பதாரர் தேர்வு பெற்றால், இவரது முதுநிலை (Seniorty) இத்தேர்வின் முதல்கட்ட தேர்வின் அடிப்படையிலே நிர்ணயம் செய்யப்படும்.

முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற காவல்துறை பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில், 8 மாத மகப்பேறுக் காலத்தில் இருந்த தேவிகா என்ற விண்ணப்பதாரர் கலந்து கொண்டார். உடல்திறன் போட்டியில் கலந்து கொண்டு 100 மீட்டர் தூரத்தை 18.20 வினாடிகளில் ஓடி முடித்தார். இருந்தாலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைத் தாண்டி (17.50 வினாடிகள்) 30 வினாடிகள் எடுத்துக் கொண்டதால், இவர் அடுத்துக் கட்டத்துக்கு செல்ல முடியவில்லை. இந்த, வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச நெறிமுறைகளை சுட்டிக் காட்டி தேவிகாவுக்கு பணி வழங்கிட உத்தரவிட்டனர்.


எனவே, மகப்பேறு காலத்தில் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முதற்கட்டத் தேர்வில் கலந்து கொள்ள முடியாத தேர்வர்களுக்கு மட்டும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு அடுத்தக் கட்ட தேர்வுகள் நடைபெறும். அதில், தேர்ச்சிப் பெற்றால் முதுநிலை இழக்காமல் காவல் அதிகாரியாக நிர்ணயம் செய்யப்படுவார்கள்.

முக்கியமான நாட்கள்:

விண்ணப்ப செயமுறை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 3552

மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்றும், பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment