தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு - 889 மருந்தாளுனர் காலியிடங்கள் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Friday, August 12, 2022

தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு - 889 மருந்தாளுனர் காலியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ துணைநிலை சேவைப் பிரிவில் தற்காலிக மருந்தாளுனர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுளளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் எண்ணிக்கை: 889சம்பளம்: ரூ.35,400 முதல் 1,12,400 (சம்பள ஏற்ற நிலை - 11)

01.03.2019 அன்று வெளியான ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி (No.12/MRB/2019) ஏற்கனவே விண்ணப்ப பதிவு செய்த தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இருந்தாலும், அவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

முக்கியமான நாட்கள்:

அறிவிக்கை: 10.08.2022

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 30.08.2022

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு : பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.600ஆகும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) , பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.300 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பபங்கள் பெறப்படும். வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலும் விவரங்கள், https://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 'Notification' என்ற தலைப்பில் கீழ் உள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad