Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 17, 2022

அரசுப் பேருந்துகளில் பணமில்லா பரிவரித்தனை..டிஜிட்டல் டிக்கெட் - அசத்தல் அறிவிப்பு

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த மே மாதம் அறிவித்தார்.

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் விழுப்புரம், கும்பகோணம், கோவை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 26 மண்டலங்களில் 20,304 பேருந்துகள் மூலம் தினசரி 1.5 கோடி பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் தவிர்த்து மற்ற அனைத்து பயணிகளுக்கு காதித பயண சீட்டுதான் வழங்கப்படுகிறது. இந்த காதிக பயணச் சீட்டு முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

அதிக அளவு ரொக்க பணப் பரிமாற்றம் உள்ள காரணத்தால், இதை கண்காணிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே இதை சரிசெய்ய மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது. 2022-23 ஆண்டிற்கான சட்டசபையில் அறிவித்துள்ள அறிவிப்புகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை/ பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல், பயணக்கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல். அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவாக ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைத்தல், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் உள்ள 16 பேருந்து முனையங்களில் (LED) தகவல் பலகை மூலம் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாடு செய்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளி போக்குவரத்துக் கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளதையும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த தானியங்கி பயணச்சீட்டு முறை மெட்ரோ ரயில், பிற பணப் பரிமாற்ற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

டிக்கெட் வாங்குவதற்காக சில்லறையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற சிக்கல் இனி இருக்காது என்பதால் பயணிகளிடம் இந்த திட்டம் நிச்சயம் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் தானியங்கி பயணச்சீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டால் கண்டக்டர்கள் பணி காலியாகிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment