Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 16, 2022

நாணயங்களில் இந்திய வரைபடத்தை உருவாக்கி கிருஷ்ணிகரி பள்ளி மாணவர்கள் அசத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த நாச்சிக்குப்பம் அரசு பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாணயங்களை கொண்டு 15 அடி நீளமுள்ள இந்திய வரைபடம் வரைந்து மாணவர்கள் அசத்தல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் இந்திய வரைபடத்தை நாணயங்களை வைத்து முழுவதுமாக வரைந்து அசத்தியுள்ளனர்.

இதில் 8 வகுப்பு படிக்கும் மாணவி அக்சியா மகாலட்சுமி, நிலஜெனிஃபர், ராகவி, எழிசபெத் மற்றும் சரத்குமார் ஆகிய 5 மாணவ-மாணவிகள் சேர்ந்து மொத்தம் 3947 ரூபாய் நாணயங்களை கொண்டு 15 அடி நீளமுள்ள இந்திய வரைபடத்தை வரைந்துள்ளனர்.

மேலும் ஒரு ரூபாய் , இரண்டு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து மாநிலங்களை தனித்தனியாக பிரித்தும் வரைந்துள்ளனர். மாணவர்களின் இந்த வரைபடத்தை கண்ட சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.

மனவர்களின் அசாத்திய முயற்சி

மாணவ-மாணவிகள் சுதந்திர தினத்தை புதுவிதமாக கொண்டாட தனித்துவமான திறமையை வளர்க்கும் வகையில் இந்திய வரைபடத்தை நாணயங்கள் வைத்து வரைந்து புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

No comments:

Post a Comment