பள்ளி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய மாணவர்கள் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, August 16, 2022

பள்ளி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய மாணவர்கள்

75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்தும், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றும், தலைவர்கள் வேடங்கள் அணிந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாக சித்தளந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்காக இரவு முதலே பள்ளி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரித்து அப்பகுதியில் உள்ளவர்களின் கண் கவரும் வகையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அரசுப் பள்ளி

அதனைத் தொடர்ந்து இன்று நாட்டின் 75வது சுதந்திரதின விழா பள்ளி தலைமையாசிரியை சி.பி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் ஊரில் முக்கிய வீதிகளில் கொடிகளை கையில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர், மாணவர்கள் முக்கிய தலைவர்களின் வேடம் அணிந்து வந்து சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து உரைத்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்று பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்செங்கோடு வட்டார கல்வி அலுவலர், சித்தளந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபா கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பூரணம் பொன்னுசாமி மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் ராதாமணி, ஜாஸ்மின், ஜெயராணி மற்றும் சமூக ஆர்வலர் மு வஜ்ரவேலு, மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad