Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 25, 2022

ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்: ‘மைனர் டிகிரி’ அறிமுகம் செய்தது அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ’மைனர் டிகிரி’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், பாடத்திட்டங்களை அண்ணா பல்கலைக்கழகம் முழுமையாக மாற்றி வடிவமைத்துள்ளது. அதில், மைனர் டிகிரி திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, ஃபின்டெக் மற்றும் பிளாக் செயின், பொது நிர்வாகம், தொழில்முனைவோர், டேட்டா அனலிஸ்ட், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய 5 பாடங்களையும் படித்து தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு கூடுதலாக மைனர் டிகிரி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் டிகிரியை மூன்றாவது ஆண்டு முதல் மாணவர்கள் படிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், ‘தமிழா் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ ஆகிய பாடங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயம் இந்தப் பாடங்களில் மாணவா்கள் தோ்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளும் நிகழாண்டு அல்லது அடுத்த ஆண்டில் தமிழா் மரபு மற்றும் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை தங்களது பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment