Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 7, 2022

வாய்ப்புண், சிறுநீர் கோளாறு, சரும நோய், நீரிழிவு நோய்களைக் கட்டுப்படுத்தும் - கோவைக்காய்



சமையலுக்கு அவசியம் பயன்படுத்த வேண்டிய காயாக கோவைக்காய் விளங்குகிறது. வேலி ஓரங்களில், வயல்வெளிகளில் படர்ந்து இருக்கும் இந்த காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

*குளிர்ச்சி தன்மை கொண்ட கோவைக்காயை கூட்டு, குழம்பு மற்றும் பொரியல் செய்து சாப்பிடலாம். மோரில் போட்டு வற்றலாகவும் பயன்படுத்தலாம். இதில் கால்சியம், போலிக் அமிலம் அதிகமுள்ளது.

*கோவைக்காயில் நீர் 92 கிராம், மாவுப்பொருள் 3-0 கிராம், நார் 1.6 கிராம், கொழுப்பு - 0.1 கிராம், போலிக் அமிலம் 59 மி.கிராம், கால்சியம் 40 மி.கிராம், பாஸ்பரஸ் 30 மி.கிராம், இரும்பு 1.5 மி.கிராம், நியாசின் 0.7 மி.கிராம், தயமின் 0.07 மி.கிராம், ரைபோப்ளோவின் 0.08 மி.கிராம், வைட்டமின் சி-15 மி.கிராம், கலோரி 18 எனும் விகிதத்தில் சத்துக்கள் நிறைந்துள்ளன.

*மாதம் மூன்று முறையாவது சமைத்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் பலம் பெறும். உடல் சூடு குறையும். சிறுநீர் கோளாறுகளை போக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். சரும நோய்களை நிவர்த்தி செய்யும். வாய்ப்புண்ணை ஆற்றும். சொறி, சிரங்குகளை குணமாக்கும். கண் எரிச்சலை களையும்.

*இதில் உள்ள கசப்புத்தன்மை வாய்ப்புண்ணை விரைவில் ஆற்றும் சக்தி கொண்டது.

*சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு, பிஞ்சு கோவையை வாங்கி பொடியாக நறுக்கி, பாசிப்பருப்புடன் சமைத்து கொடுத்தால், சிறுநீர் பிரச்னை தீரும்.

No comments:

Post a Comment