புரதம், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம் - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, August 7, 2022

புரதம், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழம்

*கொய்யாவில் உள்ள தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

*சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

*இதில் கார்போஹைட்ரேட் அளவு மிகவும் குறைவு என்பதால், உடல் எடை குறைப்புக்கு உதவும்.

*புரதத்திற்கு பசியைத் தூண்டும் ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உண்டு.

கொய்யாப்பழத்தில் புரதம் அதிகமாகவே இருப்பதால் தினமும் சாப்பிட்டு வரலாம்.

*குடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் வைட்டமின் பி-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி1, பி3, பி6 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அவை செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும்.

*அதிகப்படியான இன்சுலின் தடுப்பு மருந்து உபயோகிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும். இன்சுலின் செயல்பாடு சீராக நடைபெறுவதற்கு கொய்யாப்பழம் உதவும்.

*கொய்யாப்பழ இலைகளைக் கொண்டு தேனீர் தயாரித்தும் பருகலாம். நீரிழிவு பிரச்னைக்கு நிவாரணம் தரும்.

No comments:

Post a Comment

Post Top Ad