Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 2, 2022

IBPS புரொபேஷனரி அதிகாரிகள் பதவி: 6432 காலியிடங்கள் அறிவிப்பு

நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் (IBPS) வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 6432
காலியிடங்கள்


முக்கியமான நாட்கள்:

ஆன்லைன் பதிவு செய்தல்: 02.08.2022 முதல் 22.08.2022 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;

முன்-தேர்வு பயிற்சி : செப்டம்பர்/அக்டோபர் 2022

ஆன்லைன் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்தல்: அக்டோபர் 2022

கணினி வழியில் நடைபெறும் முதல்நிலை எழுத்துத் தேர்வு: நவம்பர் 2022

கணினி வழியில் நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வு : நவம்பர் 2022

நேர்முகத் தேர்வு : ஜனவரி/பிப்ரவரி 2023

தற்காலிக ஒதுக்கீடு : ஏப்ரல் 2023

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வில் பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கேள்விகள் இடம்பெறும். ஆங்கில மொழித்திறன் தவிர இதர பிரிவுகளில் ஆங்கிலம்,இந்தி ஆகியவற்றில் மட்டுமே கேள்விகள் இடம்பெறும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் இளம்நிலை பட்டம் பெற்றவர்கள் (அல்லது) மத்திய அரசு அங்கீகரித்த அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

எப்படி விண்ணப்பிப்பது: முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

"Click here to apply online for CRP PO/MT-XII" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.

பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.

எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

No comments:

Post a Comment