Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 5, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.09.2022

திருக்குறள் :

அதிகாரம்:நல்குரவு 

குறள் எண்:1046 

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

பொருள்: 
 நல்ல பொருளினை மிகவும் தெளிந்து சொன்னாலும் வறுமையுடையார் சொல்லும் சொற்பொருள் பிறர்க்கு குறையாகப்படும்.

பழமொழி :

Aspiring people are inspiring people.
ஆர்வம் உடையோரே ஆர்வத்தை தூண்ட முடியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தேனீ எறும்பு போல சுறுசுறுப்பாக உழைக்க முயற்சிப்பேன். 

2. என்னுடைய உழைப்பு பெயருக்காக அல்ல பேர் வாங்கும் அளவுக்கு உழைப்பேன். 

பொன்மொழி :

நம் கனவுகளை பின்தொடரும் தைரியம் நமக்கிருந்தால், அதை நனவாக்க நம்மால் முடியும் : வால்ட் டிஸ்னி

பொது அறிவு :

1.உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கு எது? 

முள்ளம்பன்றி.

 2. உடற்பயிற்சி செய்து வந்தால் எந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும் ? 

டாப்மைன்.

English words & meanings :

Em-pha-size - to give special attention to something. Verb. ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடு, வலியுறுத்தல். வினைச் சொல். The teacher always emphasized the importance of Honesty 

ஆரோக்ய வாழ்வு :

1. சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன

NMMS Q 53:

ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையே உள்ள விகிதம் என்ன? 

விடை : 2: 1

செப்டம்பர் 05


வ. உ. சி அவர்களின் பிறந்தநாள்


வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillaiசெப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார்.

இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள்


சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ( 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மு. மேத்தா அவர்களின் பிறந்தநாள்




மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 51945பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்..

அன்னை தெரசா அவர்களின் நினைவுநாள்


அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப் பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும்1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். 

நீதிக்கதை

காவல்காரன்

மகத நாட்டின் மன்னர், தான் புதிதாக அமைத்த அழகிய தென்னந்தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவருக்கு ராமனின் நினைவு வந்தது. அரசவையில் கோமாளியைப் போல் ஒரு வேலையும் செய்யாமல் சுற்றி வருகிறான். ஆகையால் அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார். இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள் என்றார்.

அரசே! நீங்கள் கூறியது போலவே நடந்து கொள்வேன் என்றான் ராமன். அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் ராமன். பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான். பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது. ஒரு வாரம் சென்றது. தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக் கிடப்பதைப் பார்த்தார். கோபம் கொண்ட அவர், நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லா கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்? என்று கோபமாகக் கேட்டார். அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை, என்றான். இதைக் கேட்ட அரசர், இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே என்று தலையில் அடித்துக் கொண்டார். அப்பாடா! தப்பித்தோம்! என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ராமன்.

இன்றைய செய்திகள் 05.09.22


* “கரோனா காலத்திலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பணியை உலகம் நன்கு அறியும்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

* தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற ‘உழவன் செயலி’ மூலம் விண்ணப்பிக்கலாம்.

* தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* போதை பழக்கத்தை முழுமையாக ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

* இந்தியாவில் அதிகம் பேர் பாஸ்போர்ட் பெற்ற மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

* உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

* கடந்த ஜூன் மாதம்  அமெரிக்கா சென்றவர்களில் இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர்.

* மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை படைத்தனர்.

* இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமனம்.

Today's Headlines

* Puducherry Deputy Governor Tamilisai Soundararajan said in his message on Teachers' Day that "The world will know the dedicated work of teachers even in the time of Corona".

 * Application can be made through the 'Farmer App' to convert barren land into arable land.

 * Chennai Meteorological Department has informed that there is a possibility of heavy rain in 14 districts of Tamil Nadu today.

 * Minister M. Subramanian requested that charitable organizations should work together with the government to eradicate drug addiction completely.

 * School Education Department orders immediate disposal of damaged materials in government schools.

* Tamil Nadu ranks 3rd among the states with the highest number of passport holders in India.

 * In the list of countries with the largest economy in the world, India has moved up to the 5th position, leaving Britain behind.

 * Indians are the 2nd largest number of visitors to the US in June.

* A pair from Perambalur set a record in the Inter-Medical College Tennis Tournament.

 * Shaji Prabhakaran appointed as General Secretary of Football Federation of India.
 
 Prepared by : Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment