Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 4, 2022

கடையில் வாங்கும் பொருளுக்கு பணம் செலுத்த புதிய செயலி - தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகம்


ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளின் வரிசையில், தற்போது கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தும் வகையில், 'பைசாட்டோ' என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், 'ஆன்லைன் வணிகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் வருகைக்குப் பிறகு சிறு வியாபாரிகள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க போராடி வருகின்றனர். அந்த வகையில், சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு 'பைசாட்டோ' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் பயன்பெறுவார்கள்' என்றார்.

வாடிக்கையாளர்கள் இந்தச் செயலி மூலம் பொருட்கள் வாங்கும் ஒவ்வொரு முறையும் சலுகையாக குறிப்பிட்ட சதவீத தொகை அவர்களது கணக்கில் வரவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த செயலி சென்னையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment