வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்! ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Tuesday, September 13, 2022

வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்! ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்!


வாரம் 1 முறை சாப்பிட்டால் போதும்! ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்!

இதை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய pcod பிரச்சனை உடல் சோர்வு, நரம்பு பிரச்சனை, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்தும் நீங்கும்.

ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும். இது கர்ப்பப்பையை வலுவாக்கும். பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் இதனால் எங்கும்.

கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகளும் இதனால் சரியாகும். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை இந்த குறிப்பு கண்டிப்பாக சரி செய்யும். பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலி கால் வலி இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும்.

வாருங்கள் இந்த நாட்டு வைத்தியத்தை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. சாலியா விதை
2. தாமரை விதை
3. பாதாம் பருப்பு
4. கசகசா
5. மஞ்சள்
6. உப்பு
7. பேரிச்சை பழம்
8. ஏலக்காய் பொடி

செய்முறை:

1. முதலில் நாட்டு மருந்து கடைகளில் சாலியா விதை அதாவது ஆங்கிலத்தில் Halim seed என்று சொல்லக்கூடிய விதையை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த விதை தான் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து கர்ப்பப்பை பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது.

2. இதை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நீங்கள் காலை இதனை செய்து சாப்பிடுவீர்கள் என்றால் இரவே இதனை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

3. அடுத்த நாள் இதனை பார்த்தோம் என்றால் ஜெல் போன்ற பதத்தில் இருக்கும்.

4. இப்பொழுது ஒரு பொடி செய்யப் போகின்றோம்.அந்த பொடி தான் மிகவும் முக்கியமான ஒன்று.

5. முதலில் அடுப்பில் ஒரு பேனை வைத்து அதில் தாமரை விதைகள் என்று சொல்லக்கூடிய மக்கான்சை சேர்த்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் வைத்து வறுக்கவும்.

6. பின் இதனுடன் 10 பாதாம் பருப்புகளை சேர்த்து வறுக்கவும்.

7. பின் இரண்டு ஸ்பூன் அளவுக்கு கசகசாவை சேர்த்து வறுக்கவும்.

8. மிதமான சூட்டில் நன்கு வருத்தத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

9. அடுத்து முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

10. இப்பொழுது நாம் ஊற வைத்திருந்த சாலியா விதைகளை இரண்டு ஸ்பூன் அளவிற்கு அந்த பாலில் சேர்த்துக் கொள்ளவும்.

11. கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்..

12. இப்பொழுது நாம் அரைத்து வைத்திருந்த பொடியை சேர்த்துக் கொள்ளவும்.

13. சுவைக்காக நாம் இப்பொழுது எந்த ஒரு இனிப்பையும் பயன்படுத்தப் போவதில்லை.

14. நான்கு பேரிச்ச பழத்தை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைக்கவும்.

15. நன்கு பாலில் கொதித்த உடன் இறக்கி விடவும்.

16. இதனை நீங்கள் வாரம் ஒரு முறை சாப்பிட்ட வரும் பொழுது உங்களுக்கு வரும் கர்ப்பப்பை பிரச்சனை உடல் சோர்வு நரம்பு பிரச்சனை மூட்டு வலி இடுப்பு வலி கண் பார்வை மங்குதல் ஆகியவை சரியாகும். ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad