Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, September 13, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.09.2022

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: இரவு

குறள் : 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

பொருள்:
இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்கு அவனுக்கு ஏற்பட்ட வறுமையே சான்றாகும்.

பழமொழி :

Example is better than perception.


முன்னுதாரணமே கட்டளையை விட மேலானது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. "உன் திறமையோடு உன் வியர்வையும்(உழைப்பும்) சேரும் போது வெற்றி வேர்விடும். 

2. எனவே உழைத்திடு உறுதியாய். உயர்ந்திடு வானத்திற்கு.

பொன்மொழி :

உன் இலக்கை அடைய வேண்டும் என்றால் முதலில் நீ இரண்டு செயல்களை செய்ய வேண்டும்! முயற்சி, பயிற்சி.

பொது அறிவு :

1.சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது? 

 மெலானின்

 2. ஜனநாயகம் என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்? 

ஆபிரகாம் லிங்கன்.




English words & meanings :

knav·er·y - Dishonest or crafty dealing. It is very dangerous to be a friend of a knavery. Noun. வஞ்சகர். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

NMMS Q 58:

Cheese : Milk :: Sugar : ? a) Molasses. b) Palm. c) Sugarcane. d) Syrup.

 Answer: Sugarcane

நீதிக்கதை

ஆட்டுக்குட்டி

ஒருவன் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சிறியதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது. அந்த ஆள் ஒரு அப்பாவிபோல் இருந்ததால் வழியில் பார்த்த நான்கு குடிகாரர்களுக்கு அந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிப் பறித்து விருந்துண்ண ஆசை ஏற்பட்டது. அவன் போன பாதையிலேயே வேறு வழியில் முன்னால்போய் நால்வரும் தனித்தனியே கொஞ்சதூரம் இடைவெளி விட்டு வழியில் காத்திருந்தனர். 

அவன் பக்கம் வந்தவுடன் முதலாமவன் ஏய் எதுக்காக ஒரு கழுதைக் குட்டியைச் சுமந்து செல்கிறாய்? என்று கேட்டான். இவன் ஏமாறவில்லை. அவன் ஏதோ கேலி செய்கிறான் என்று சொல்லி சட்டை செய்யாமல் போனான். கொஞ்சதூரம் போனவுடன் இரண்டாமவன் எதிரில் வந்து, என்னப்பா எதுக்கு ஒரு பன்றியைச் சுமந்துட்டுப்போறே? என்று சொல்லிச் சிரித்தான். இவனுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. 

மேலும் கொஞ்சதூரம் போனவுடன் மூன்றாமவன் எதிரில் வந்து. அட என்னப்பா செத்த பாம்பை இப்படியா கழுத்திலே சுத்திக்கிட்டுப் போவாங்க? என்றான். இவனுக்கு உண்மையாலுமே சந்தேகம் வந்துவிட்டது. என்ன இப்படி ஒவ்வொருத்தனும் ஒரு மாதிரியா சொல்லிட்டுப் போறான், நான் வாங்கினது ஆட்டுக்குட்டிதானா? அல்லது வேறெதாவது கிரகமா? என்று பயந்தவனாய் நடந்தான்.

நான்காமவனும் எதிரில் வந்து ஏப்பா தனியா ஒரு பிணத்தைத் தூக்கிட்டுப்போறே அப்படின்னு கேட்டான். அவ்வளவுதான் இவனுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது. நாம் ஏதோ ஒரு குட்டி சாத்தானை ஆட்டுக்குட்டின்னு நினைத்து ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டோம்! என்று செல்லி அந்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிப் புதரில் எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தான். சிறிது நேரத்தில் அந்த ஆட்டுக்குட்டி, அந்தக் குடிகாரர் நால்வருக்கும் உணவாயிற்று!

நீதி : நாம் ஏமாளியாக இருந்தால் மற்றவர் நம்மை எமாற்றுவது மிக எளிது.

இன்றைய செய்திகள்

13.09.22

* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டிஎன்பிஎஸ்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* நீலகிரி மற்றும் கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த முடியும்: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்.

* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் கண்டறியப்பட்ட 57 முதுமக்கள் தாழிகளில் இதுவரை 35 தாழிகளை திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

* கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

* அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்.

*20 ஓவர் உலகக் கோப்பை: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு- தமிழக வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

* முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடக்கம்.

*தெற்காசிய பெண்கள் கால்பந்து: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி.

Today's Headlines

* The Madras High Court has directed the Tamil Nadu government and TNPSC to expedite the selection process for the 8,000 vacant field assistant posts in the Tamil Nadu Power Generation and Distribution Corporation.

* Out of 12,840 government school students who wrote the NEET exam in Tamil Nadu, only 4,447 passed.

* The Chennai Meteorological Department said that a red alert has been issued for the Nilgiris and Coimbatore.

 *Legal action cannot be taken against those who refuse to buy Rs.10 coins.  Can only create awareness: RBI officials explain.

 *Of the 57 old man's tombs discovered in Kontakhai excavations near Tiruppuvanam in Sivagangai district, 35 tombs have been opened and studied so far.

 *Indian Army Chief Manoj Pandey has said that India and China's withdrawal of their forces in eastern Ladakh is going as planned.

 *Attack on thermal power plant;  Eastern Ukraine in Darkness: Zelensky Condemns Russia

 *20-over World Cup: Rohit Sharma-led Indian team announced- Tamil Nadu players included.

*The Chennai Open tennis tournament in which leading players will participate started yesterday.

* South Asian Women's Football: Team India Qualifies for Semi-Finals
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment