Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 1, 2022

டில்லி மாடலுக்கு' மாறும் 41 தமிழக அரசு பள்ளிகள்


தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள், 'டில்லி மாடலுக்கு' மாறுகின்றன.மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை, தி.மு.க., அரசு எதிர்த்து வருகிறது. ஆனால், அதில் உள்ள பல முக்கிய அம்சங்கள், வெவ்வெறு பெயர்களில் செயலுக்கு வருகின்றன.

இந்நிலையில், டில்லி அரசின் 'மாடல் பள்ளிகள்' போன்று, தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள் மாற்றப்படுகின்றன.இவற்றில், 26 பள்ளிகள்'தகைசால் பள்ளிகள்' என்றும்; 15 பள்ளிகள் 'மாதிரி பள்ளிகள்'என்றும் அழைக்கப்பட உள்ளன.

இதற்காக, அ.தி.மு.க., ஆட்சியின்போது மாதிரி பள்ளிகளாக இருந்தவையும், வேறு சில புதிய பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான துவக்க விழா, வரும், 5ம் தேதி சென்னை பாரதி மகளிர் கல்லுாரியில் நடக்கிறது.

தேசபக்தி பாடம்

இதில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, தமிழக அரசின் 'டில்லி மாடல்' பள்ளி திட்டத்தை துவக்கிவைக்கிறார்.டில்லி மாடல் பள்ளிகளில், மத்திய அரசு நடத்தும் 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கேற்ற பாடத்திட்டங்கள் உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் அமைந்துள்ள தேச பக்தி பாடத்திட்டமும் அமல்படுத்தப்படுகிறது.

இது தவிர, ஆஸ்திரேலியா கல்வி ஆராய்ச்சி அமைப்பு, ஹார்வர்டு பல்கலை, மத்திய அரசின் ஐ.ஐ.டி., நிறுவனங்கள், என்.ஐ.எப்.டி. நிறுவனங்களுடன் இணைந்து, பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அமலில் உள்ளன. கலை, இசை, யோகாவுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

கூடுதல் மொழி கற்பித்தல்

இந்த மாடலை பின்பற்றி, தமிழகத்தில் செயல்பட உள்ள, 41 பள்ளிகளிலும் கூடுதல் மொழி கற்பித்தல், தேசபக்தி பாடத்திட்டம், நுழைவு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் போன்றவை அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஏப்ரல் மாதம், முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றபோது, அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டார்.

No comments:

Post a Comment