Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 1, 2022

இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை

அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பிளஸ் 2 வகுப்புகளில் உருது, பிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டிய கட்டாயமாகிறது.

தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.

புகார்: ஆனால், சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என தகவல்கள் வெளியானதை அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்.

விலக்கு:

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 2-ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ்மொழி தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும். அதற்காக தமிழ் மொழி பாடத்திட்டங்களை சரிவர பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும்.

சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்துள்ள தகவலை அடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment