JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH)வெளியிட்ட அறிவிப்பில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள், வாகனப் பதிவு மற்றும் உரிமையை மாற்றுதல் உள்ளிட்ட 58 குடிமக்கள் தொடர்பான சேவைகளை ஆதார் வைத்து ஆன்லைன் மூலம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்தி வரும் மத்திய அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை பல விஷயங்களை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது. தற்போது நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஓட்டுநர் உரிமம், நேஷனல் பர்மிட், வாகன ரிஜிஸ்ட்ரேஷன் போன்றவற்றை எளிமையான முறையில் ஆன்லைனில் செய்யும் வகையிலான சேவையைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH)வெளியிட்ட அறிவிப்பின் படி, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் உரிமையை மாற்றுதல் உள்ளிட்ட 58 குடிமக்கள் தொடர்பான சேவைகளை ஆதார் சரிபார்ப்பு மூலம் ஆன்லைனின் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இனி ஆன்லைனில் பெறக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் வந்துவிட்டதால் வீட்டில் இருந்த படியே ஓட்டுநர் உரிமம் முதல் நேஷனல் பர்மிட் வரை பெற முடியும். இதன் மூலம் அரசு அலுவலகங்களில் மக்களின் காத்திருப்பு நேரம் குறைவதோடு, பணியின் செயல்திறனையும் அதிகரிக்க முடியுமென மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பழகுநர் உரிமம் (லேர்னர் லைசென்ஸ்), டூப்ளிகேட் லைசென்ஸ், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு இதற்கு ஓட்டுநர் தகுதித் தேர்வு தேவையில்லை. அதாவது லேனர் லைசென்ஸ், டூப்ளிகேட் லைசென்ஸ், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு போன்றவற்றைப் பெற வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகத்திற்குச் சென்று வாகனங்களை ஓட்டிக்காட்டத் தேவையில்லை. எனவே இனி இதனைப் பெற விரும்புவோர் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் அப்ளே செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் வழங்குதல், நடத்துனர் உரிமத்தில் முகவரி மாற்றம், மோட்டார் வாகனத்தின் உரிமையை மாற்றுவதற்கான விண்ணப்பம் போன்றவையும் குடிமக்கள் தானாக முன்வந்து ஆதார் தகவலை வைத்து ஆன்லைனில் சேவைகள் பெறலாம்.
இதுதொடர்பாக செப்டம்பர் 16 அன்று அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆதார் எண் இல்லாத எந்தவொரு நபரும், CMVR 1989 இன் படி, அந்தந்த அலுவலகங்களில் நேரடியாக மாற்று ஆவணத்தைச் சமர்ப்பிப்பதன் மூலமாகச் சேவைகளைப் பெற முடியும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பெற www.parivahan.gov.in என்ற இணையதளத்தையும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) உருவாக்கியுள்ளது. இந்த தளம் மூலமாகப் பெயர் மாற்றம், ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல், சர்வதேச ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், கையொப்பம் மாற்றம், வாகன உரிமை மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட 58 சேவைகளையும், கட்டண சேவைக்கான தொகையைச் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment