9 மாவட்டங்களுக்கு செப்.8 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Sunday, September 4, 2022

9 மாவட்டங்களுக்கு செப்.8 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு வரும் 08.09.2022 அன்று தமிழகத்தில் கீழ் கண்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

Holidays declared in Chennai, Tirupur, Coimbatore, Kanyakumari, Nilgiri, Erode, Thiruvallur, Kanchipuram, Chengalpattu.ஓணம் பண்டிகையையொட்டி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களுக்கும் வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

செப்டம்பர் 8ம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழ்கின்ற கேரள மக்களும், கேரளத்தில் வாழுகின்ற தமிழ் மக்களும், சகோதரர்களும் மகிழ்ந்து கொண்டாடும், மகத்தான திருவிழா ஓணம் பண்டிகை.

ஓணம் திருநாளில் மகாபலி சக்கரவர்த்தி இந்த பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். நாம் நலமாக இல்லை என்றால் கூட மாமன்னரின் வருகை மக்களுக்கு நன்மைகளை வழங்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வருவதால் ஓணம் சிறப்புக்குரியது.

அத்தப்பூ கோலமிட்டு, அழகான தோரணங்கள் கட்டி, நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க நாம் தயாராவது போல மகாபலியை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் அழகுபடுத்துகிறார்கள்.

கேரளாவில் அறுவடைத் திருவிழாவாகவும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், கொண்டாடும் திருவிழாவாகவும் ஓணம் திகழ்கிறது.

சென்னை, கோவை, நீலகரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதனால், அந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் 4 விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு. முன்னதாக, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரளா சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

No comments:

Post a Comment

Post Top Ad