Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 9, 2022

நாங்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு நீங்களே காரணம்: ஆசிரியர்களிடம் ஆசிபெற்ற முன்னாள் மாணவர்கள்


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் இன்று நாங்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்றுசொல்லி, தங்களது ஆசிரியர்களின் கால்களில் விழுந்து முன்னாள் மாணவர்கள் ஆசி பெற்றது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.



சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் சேதுராமலிங்கம் தலைமை வகித்தார்.

தலைமை ஆசிரியர் செல்லத்துரை, பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் குகன் வரவேற்றார்.

விழாவில், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என 110 பேருக்கு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். முதன்மைக் கல்விஅலுவலர் சுவாமிநாதன், மாவட்டகல்வி அலுவலர் (பொ) திரிபுரசுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்விழாவில், தாங்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு காரணமான ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர். இச்சம்பவம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

No comments:

Post a Comment