JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா.
இந்த நரம்பு பிரச்சனையானது எப்பொழுது வரும் என்றால் 45 வயது தாண்டிய ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரும்.
45 வயது பையனுக்கு பின் மூட்டுகளில் உள்ள ஜவ்வு விலகுவதாலும் மூட்டுகளில் பிரச்சனைகள் ஏற்படுவதாலும் இந்த நரம்பானது பின்னிக்கொள்ளும். இதனால் உங்களுக்கு வலி ஏற்படும்.
முதுகெலும்பில் உள்ள எலும்புகளில் வீக்கம் ஏற்படுவதாலும் இந்த பிரச்சனை வரலாம்.
இதனால் இந்த மாதிரியான பிரச்சனைகள் இருக்கும்பொழுது முதுகெலும்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு சுருங்க ஆரம்பிக்கும். இதுவே நரம்பு சுருண்டு சியாடிகா என்று அழைக்கப்படுகிறது.
வாருங்கள் இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பயன்படுத்தும் முறை:
1. வெந்தயம் 2 ஸ்பூன்
2. கற்பூரவள்ளி இலை 4
3. தேன்
செய்முறை:
1. முதலில் வெந்தயத்தை இரண்டு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
2. ஒரு டம்ளரை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெந்தயத்தை போட்டுக் கொள்ளுங்கள்.
3. நான்கு ஐந்து கற்பூரவள்ளி இலை எடுத்து கழுவி வெந்தயத்தின் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. இப்பொழுது அந்த கிளாஸ் முழுவதும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
5. இரவில் தயார் செய்து 12 மணி நேரம் ஊற வையுங்கள்.
6. காலையில் அதனை வடிகட்டி குடித்து விடலாம்.
7. இதனை நீங்கள் 15 நாட்கள் தொடர்ந்து நீங்கள் குடித்து வரும்போது நரம்பு பிரச்சனை சரியாகும்.
மேலும் இதையும் நீங்கள் செய்து வரலாம் ஒரு டப்பில் சூடான தண்ணீர் ஊற்றி கல் உப்பு போடவும். நன்கு கலந்து விட்டு கல் உப்பு கரையும் வரை இருங்கள்.
கல்லுப்பு கரைந்த பின் உங்கள் கால்களை வைத்து முன்னும் பின்னும் விரல்களை அசைத்து வாருங்கள்.
பிறகு சிறிது நேரம் வைத்து வைத்து எடுங்கள். பின் பாதங்களையும் நன்கு முன்னும் பின்னுமாக சுழற்றுங்கள்.
மேலும் நரம்பு சுருட்டல் உள்ளவர்கள் சுக்கு, ஓமம், மஞ்சள்அதிகம் சேர்த்துச் சாப்பிட்டு வாருங்கள்.
No comments:
Post a Comment