Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 26, 2022

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் ஒன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன!

பெரும்பாலான தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் பணியாளர்களே இல்லாத நிலை உள்ளது என இதனை தடுக்க அரசு உடனடியாக முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அடிப்படை பணியாளர்கள்

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் 75 ஆவது பவள விழாவையொட்டி மண்டல விளக்க கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில் பங்கேற்ற இச்சங்கத்தின் தலைவர் கே. கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தமிழகத்தில் பதிவுத்துறை, வருவாய் துறை, மருத்துவ துறை, வேளாண்மை துறை போன்ற பல்வேறு துறைகளில் சுமார் ஒன்றரை லட்சம் உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தொழில் வரி

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் பத்திரப்பதிவு துறைகளில் ஆளே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் குறைவாக இருக்கும் பணியாளர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு தொழில் வரி பிடித்தம் செய்யக்கூடாது. அப்படி பிடித்தம் செய்வதாக இருந்தால் அவர் அவர்களின் சம்பளத்திற்கு ஏற்றபடி தொழில் வரியை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்துப்பட்டு வருகிறது.

இரண்டு லட்சம் ஊழியர்கள் பணியிழக்கும் அபாயம்

ஒவ்வொரு ஆட்சியாளர்களும் முதலமைச்சர் பதவிக்கு வரும் முன்னர் 2 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம் என்று முதல்வர் பதவிக்கு வருகின்றனர் ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் அனைத்து துறைகளும் கணினிமயமாக்கப்படும் என தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவை ஒட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரை சிறப்பு விருந்தினராக அழைத்து விழா நடத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment