JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட நியாய விலைக் கடை சாா்ந்த பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு விவரம்:-
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, செப்டம்பா் மாதத்துக்கான குறைதீா் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளா் அலுவலகங்களில் சனிக்கிழமை நடக்கவுள்ளது.
இதேபோன்று, மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோத்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்யும் பணிகள் நடைபெறும்.
நியாய விலைக் கடைகளில் பொருள்கள் பெற நேரில் வர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை தீா்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உணவுத் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment