இந்த பழத்தை தினமும் சாப்பிட்டா... உயிருக்கு ஆபத்தான கொழுப்பு கல்லீரல் நோய் உங்களுக்கு வராதாம்..! - தமிழ்க்கடல்

Join Thamizhkadal Official Telegram Group

Join Thamizhkadal WhatsApp Groups

Saturday, September 10, 2022

இந்த பழத்தை தினமும் சாப்பிட்டா... உயிருக்கு ஆபத்தான கொழுப்பு கல்லீரல் நோய் உங்களுக்கு வராதாம்..!

ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ உணவுமுறை மிகவும் முக்கியமானது. பல ஆய்வுகள், இறைச்சிப் பொருட்களுடன் ஒப்பிடும்போது, ​​மக்கள் தங்கள் அன்றாட உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றன.

நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், பழங்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஏனெனில், இவை மனித உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, நமக்கு ஆற்றலையும் அளிக்கிறது.

பல பழங்கள் நாள்பட்ட நோய்க்கான அபாயத்தை குறைத்து, உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. உடல் பருமன், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இவை உதவும். எந்த பழத்தை தினசரி உட்கொள்வது நீண்ட ஆயுளுடன் தொடர்புடையது மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஆய்வு என்ன கூறுகிறது?

திராட்சையின் அதிசயமான பலன்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திராட்சை பழத்தை எலிகளின் உணவில் நீண்ட காலம் சேர்த்துக் கொள்ளும்போது, ​​அது மரபணு வெளிப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கொழுப்பு கல்லீரலின் தீவிரம் மற்றும் அதிக கொழுப்பு குறைந்து, இந்த பழத்தை உண்ணும் எலிகளின் ஆயுட்காலம் அதிகரித்தது. இந்த ஆய்வு உணவுகள் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கொழுப்பு கல்லீரல் நோய்

கொழுப்பு கல்லீரல் நோய் உலக மக்கள் தொகையில் சுமார் 25% பேரைப் பாதிக்கிறது. கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற எதிர்மறை விளைவுகளுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படலாம். இருப்பினும் இது அதிகப்படியான மது அருந்துதலுடனும் தொடர்புடையது. கொழுப்பு கல்லீரல் நோய் பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. சோர்வு, எடை இழப்பு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படத்தலாம்.

திராட்சையின் நன்மைகள்

ஆய்வின் படி, திராட்சை சாப்பிடுவது, ஒரு நாளைக்கு இரண்டு கப், கொழுப்பு கல்லீரல் வளர்ச்சியில் பொதுவாக ஈடுபடும் மரபணுக்களில் சாதகமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் போன்ற அதிக கொழுப்பு அல்லது மேற்கத்திய உணவுகளின் எதிர்மறையான விளைவுகளை குறைக்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், அழற்சி நோய்கள், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கிறது.

நீண்ட ஆயுளோடு வாழலாம்

திராட்சை மரபணு வெளிப்பாட்டைப் பாதிப்பது மட்டுமல்லாமல், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு, நீண்ட ஆயுளுக்கும் வழிவகுக்கும். காஃபிக் அமிலம், கேலிக் அமிலம் மற்றும் கேடசின் போன்ற பிற ஆக்ஸிஜனேற்றிகளுடன் இயற்கையான ஃபீனால் திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

கல்லீரலை பாதுகாக்கிறது

விலங்குகள் மற்றும் சில மனித ஆய்வுகளின் பரந்த அளவிலான சான்றுகள் திராட்சை மிகவும் கல்லீரலுக்கு ஏற்ற உணவு என்று கூறுகின்றன. திராட்சை மற்றும் திராட்சை விதை சாறு கல்லீரலை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. மேலும், இது ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கின்றன மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றன.

முடிவு

சரியான உணவு முறையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் முக்கியமாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad