Search This Blog

Thursday, September 29, 2022

வீட்டிற்குள் மணி பிளான்ட் வளர்த்தால் இத்தனை நன்மைகளா..?

0 comments
நம் வீடுகளை அழகாக மாற்றவும், வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதிகபட்ச நேர்மறை ஆற்றலை பெறவும் நாம் விரும்புகிறோம்.
இதற்கு பசுமையான தாவரங்கள் பெரிதும் உதவுகின்றன. நாட்டில் மிகவும் பிரபலமான இன்டோர் தாவரங்களில் ஒன்று மணி பிளான்ட் (Money Plant) .

இவை வாஸ்து படி ஒரு நல்ல பாசிட்டிவ் ஆற்றலை வெளிப்படுத்த கூடிய சிறந்த இன்டோர் தாவரமாகும். இந்த செடிகளை வீடுகளின் உட்புறத்தில் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் வைப்பது வீட்டை செல்வ செழிப்புடன் வைக்கும். இவை பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையின் காரணமாக வீடுகள் மட்டுமின்றி அலுவலகங்கள், கஃபேக்கள், கடைகள் என பல இடங்களில் தொங்கும் கூடையில் வைக்கப்படுகின்றன. பொதுவாக மணி பிளான்ட்கள் நிதி ரீதியாக நாம் எதிர்கொள்ளும் சவால்களை தவிர்க்க உதவுகிறது, நம் வீட்டிற்கு அதிர்ஷ்டம் & செல்வத்தை கொண்டு வருகிறது.

அது மட்டுமின்றி அசுத்தமான காற்றை வடிகட்டுவது மற்றும் ஆக்ஸிஜன் வரத்தை அதிகரிப்பது முதல் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து தூக்கக் கோளாறுகளை மேம்படுத்துவது வரை பல ஆரோக்கிய நம்மைகளையும் இவை நமக்கு தருகின்றன.

No comments:

Post a Comment