JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
SSC CGL: 2022-23 ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது.
ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் காலியாக உள்ள குரூப் 'பி'&'சி' பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கையை பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற முகவரியில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 10.10.2022 (இரவு 23:00 மணி).
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மட்டும் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
தெரிவு செய்யப்படும் முறை:இப்பதவிக்கான தேர்வு முறையானது, முதல் நிலை(Tier- I), இரண்டாம் நிலை (Tier- II), மூன்றாம் நிலை(Teir - II) என 2 முறைகளில் நடைபெற உள்ளது.
முதல்நிலை ,இரண்டாம் நிலை தேர்வு கொள்குறி வகை வினாக்களைக் கொண்டது. கணினி வழியில் தேர்வு நடைபெறும். பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய கூறுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
மூன்றாம் நிலை தேர்வு பேனா/பேப்பர் முறையில் நடைபெறும். தேர்வர்கள் வினாக்களுக்கு விரிவான பதில்கள் அளிக்க வேண்டும்.
மேலும், பதவியின் பெயர்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் இன்று வெளியாகும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்படும்.
No comments:
Post a Comment