JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, September 26, 2022

TET Exam : ஆசிரியர் தகுதி முதல் தாள் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

2022ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - I அக்டோபர் 14 முதல் 20 வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


இந்த கணினி வழித் தேர்வுக்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test)மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit Card) வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment