Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 26, 2022

20,000 பணிகளுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு: சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பட்டதார் நிலை தேர்வுக்கு (SSC- CGL) தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், தெரிவித்துள்ளதாவது:-

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப் பி மற்றும் குரூப் சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக 08.10.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அதிக அளவில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வகையில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சேவை மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 11.10.2022 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. மேலும், விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

No comments:

Post a Comment