JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்த மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இருமல் காய்ச்சல் சளி என்பது வந்து விடுகிறது.
பலருக்கும் வரட்டு இருமல் பெரிதும் சிரமப்படுவர். எத்தனை டானிக் குடித்தாலும், மருத்துவரை சந்தித்தாலும் இந்த வரட்டு இருமல் மட்டும் சரியாகுவதில்லை. வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை போதும் எளிதில் குணப்படுத்தி விடலாம். முதலில் இந்த கசாயம் செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்: 2 அல்லது 3,
கற்பூரவல்லி ,தூதுவளை, மிளகு, சீரகம், துளசி ஒரு பட்டை, ஒரு லவங்கம், எலுமிச்சை பழம், இஞ்சி.
முதலில் இஞ்சி பட்டை லவங்கம் மிளகு சீரகம் ஆகியவற்றை தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் நாம் தட்டி வைத்துள்ளதை போட வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்து அருந்தி வறட்டு இருமல் குணமாகும்.
இரண்டாவது முறை:
ஐந்து கற்பூரம் அலைகள் மற்றும் இரண்டு சின்ன வெங்காயத்தை நெருப்பில் காட்டி அதன் சாற்றை பிழிந்து குடித்து வரலாம். நெஞ்சில் இருக்கும் சளி இருமல் அனைத்தையும் குணமாக்கும்.
No comments:
Post a Comment