Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 24, 2022

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் 1021 காலியிடங்கள் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ் பாட திட்டத்தில் இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவி தொடர்பாக தொடர்பாக 22.05.2020 தேதியிட்ட ஆள் சேர்க்கை அறிவிப்பின் படி, விண்ணப்பித்தவர்களும் தற்போது மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே, தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தால் தற்போது மீண்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 1021

இதற்கான விண்ணப்ப செயல்முறையானது வரும் 25ம் தேதியுடன் நிறைவடைகிறது. சம்பள விபரம்: ரூ.56100 முதல் 1,77,500 வரை (நிலை-22)

உதவி சிகிச்சை நிபுணர் பதவிக்கான அடிப்படைத் தகுதிகள்: மருத்துவ கல்வி வாரியத்தால் அங்கீகரிப்பட்ட எம்.பி.பி.எஸ் பாடநெறியில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

12 மாதங்களுக்கு குறையாது, சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி (compulsory rotatory internship) முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் கீழ் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பபம் செய்வது எப்படி? www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். பட்டியல் இனத்தவர், பட்டியலின அருந்ததியினர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ரூ. 500 செலுத்த வேண்டும்.

தெரிவு முறை: தமிழ் மொழித் தகுதித் தேர்வு, கணினி வழி எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழித் தேர்வு வெறும் தகுதித் தேர்வாகும். இத்தேர்வில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

வயது வரம்பு: 01.07.2022 அன்று பட்டியலின, பட்டியலின பங்குடியின, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு விண்ணப்பதாரர்கள் 59க்கு கீழ் இருக்க வேண்டும். இதர வகுப்பினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 37 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment